இத்தாலியில் 2ஆம் உலகப்போரின் குண்டு - உரிய நேரத்தில் செயலிழக்க செய்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..

  முத்து   | Last Modified : 17 Dec, 2019 12:13 pm
world-war-ii-era-bomb-unearthed

இத்தாலியின் பிரிந்தி நகரில் 2ம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, சிறைச்சாலை, மருத்துவமனைகள் மூடப்பட்டன. 

பிரிந்தி நகரில் உள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை ஊழியர்கள் கண்டெடுத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வெடிகுண்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். செயலிழக்கப்படாத அந்த வெடிகுண்டு 1 மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடன் இருந்தது.

இந்த குண்டு செயல்பட்டுடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் 1941ஆம் ஆண்டு அந்த வெடிகுண்டை பிரிட்டிஷ் படையினர் வீசி இருக்கலாம் என கருதப்படுகிறது. பெரும் அச்சுறுத்தலாக இருந்த வெடிகுண்டை செயலிழக்க நிபுணர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன. 54 ஆயிரம்  பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 

பிரிந்தி விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் இரண்டு மருத்துவமனைகளும் மூடப்பட்டன. பிரிந்தி சிறையில் இருந்த 200 கைதிகள் அருகே உள்ள லீசி சிறைக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகள்  மேற்கொள்ளப்பட்டு அதன்பின்னர் , சுமார் 40 நிமிடங்களுக்கு பின் வெடிகுண்டு செயலிழப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் துரின் நகரில் கடந்த 1ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close