வங்கதேசத்திலிருந்து ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஆரம்பம்

  Shanthini   | Last Modified : 27 Dec, 2017 10:16 pm

 

மியான்மர்- வங்கதேசம் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை வங்கதேசத்திலிருந்து திருப்பி அனுப்புவதற்கான அதிகாரப்பூர்வப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக ஒரு லட்சம் ரோஹிங்கியா அகதிகளைக் கொண்ட பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக் காரணமாக லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் உயிருக்கு அஞ்சி பகுதியில் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர். 

இவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் மியான்மர்- வங்கதேசம் இடையே கடந்த நவம்பர் 23 கையெழுத்தானது. இந்த நிலையில், வங்கதேச வெளியுறவுச் செயலாளர் ஷாஹீதுல் ஹக்கு தலைமையில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றது. இதைப் பற்றி பேசியுள்ள வங்கதேச உயர் அதிகாரி ஒருவர், “தஞ்சமடைந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகளின் பெயர் பட்டியல் ஏற்கனவே எங்களிடம் உள்ளது.

முதற்கட்டமாக இடம்பெயர்ந்த ஒரு லட்சம் ரோஹிங்கியாக்களின் பெயர் பட்டியல் மியான்மரிடம் கொடுப்போம். மியான்மர் அப்பட்டியலை ஆராய்ந்ததும், அடுத்தப்பட்டியலை நாங்கள் அனுப்புவோம்” எனக் கூறியிருக்கிறார். 

ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தின் படி, 2016க்கு பிறகு வங்கதேசத்திற்குள் தஞ்சமடைந்த ரோஹிங்கியாக்கள் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள் அல்லது திருப்பி அனுப்பப்படும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இப்பணி பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.