ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் பலி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 31 Dec, 2017 06:33 pm

ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரி ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் நங்கர்கார் மாகாணத்தில், ஜலாலாபாத் நகரில், முன்னாள் மாவட்ட பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. இதில், நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர். இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், உடல் சிதறி 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு வந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதல் இது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், அந்த பகுதியில் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ் ஆதரவு அமைப்புக்கள் நிறைய உள்ளன. இதனால், இவற்றில் ஏதாவது ஒன்று தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் நூர் அகமது ஹபீபீ தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close