தனியாக எவரெஸ்ட் மலை ஏற தடை

  SRK   | Last Modified : 31 Dec, 2017 07:20 pm


உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் வெளிநாட்டவர்கள் தனியாக ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உலகின் முன்னணி சுற்றுலாத் தலமான எவரெஸ்ட் மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகின்றனர்.  நூற்றுக்கணக்கானோர் எவரெஸ்ட் சிகரத்தை தொட முயற்சி செய்து வருகின்றனர். மலை ஏற முயற்சி செய்பவர்கள் அதிகரிப்பதால், அங்கு பலியாவோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குளிர், பனிச் சரிவு, போன்ற பல்வேறு காரணங்களால் மலை ஏறுபவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த வருடம் மட்டும் 6 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதில் ஏற்கனவே சிகரம் தோட்ட ஒரு 85 வயது நேபாள முதியவரும் அடக்கம். தனது சாதனையை முறியடிக்க முயற்சி செய்தபோது இறந்தார். இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி எவரெஸ்ட் மலை ஏறுபவர்களுக்கான விதிகளில் சில மாற்றங்களை நேபால் அரசு கொண்டுவந்துள்ளது. அதில், இனி துணை இல்லாமல் யாரும் தனியாக மலை ஏறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மட்டுமல்லாமல், மலை ஏற உதவும் கைடுகளுக்கு இது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 

மேலும், கால்களை இழந்தவர்கள், கண் தெரியாதவர்கள் ஆகியோர் போதிய மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்தால் தான் மலையேற அனுமதிக்கப் படுவார்கள் என்றும் நேபால் அரசு கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close