வடகொரியாவுக்கு எண்ணெய் சப்ளை; மற்றொரு கப்பல் பிடிபட்டது!

  SRK   | Last Modified : 01 Jan, 2018 04:38 am


பனாமா நாட்டின் கப்பல் ஒன்று, தென்கொரிய கடற்படை அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டி என்ற அந்த கப்பல், வடகொரியாவுக்கு சட்டவிரோதமாக எண்ணெய் வழங்க வந்ததாக விசாரணை நடந்து வருகிறது.

தொடர்ந்து, அணுஆயுதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என பல சர்ச்சைகளை செய்து உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது வடகொரியா. இவற்றிற்கு தண்டனையாக வடகொரியா மீது பல தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா, பல பொருளாதார தடைகளும் விதித்தது. சர்வதேச நாடுகள் வடகொரியாவுக்கு எண்ணெய் வழங்கக் கூடாது என ஒரு தடையும் உள்ளது.

ஆனால், இந்த தடையை மீறி வடகொரியாவுக்கு சிலர் சட்டவிரோதமாக எண்ணெய் வழங்கி வருகின்றனர். கொரிய கடற்பரப்பில் கடந்த வாரம் ஒரு கப்பலை தென்கொரிய அதிகாரிகள்  பிடித்து நிறுத்தி வைத்தனர். அந்த கப்பல் சீனாவை சேர்ந்ததென்றும், வடகொரியாவுக்கு எண்ணெய் வழங்க அது முயற்சித்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பல நாட்டு தலைவர்கள் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், கடந்த 21ம் தேதி தென்கொரிய அதிகாரிகள் ஒரு கப்பலை பிடித்திருந்தனர். பனாமா நாட்டுக்கு சொந்தமான அந்த சரக்கு கப்பலும், வடகொரியாவுக்கு எண்ணெய் வழங்க வந்ததாக விசாரணை நடந்து வருகிறது. அந்த கப்பலில் பணியாளர்கள் பெரும்பாலும், சீனர்கள் மற்றும் மியான்மர் மக்கள் என தென்கொரிய அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close