புத்தாண்டு வாழ்த்து கூறிய வடகொரிய அதிபர் - பதற்றத்தில் உலக நாடுகள்

  Anish Anto   | Last Modified : 02 Jan, 2018 11:06 am

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளது. 

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வடகொரியா அதிபரின் வாழ்த்து செய்தியானது அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய அவர், "அணு ஆயுதம் தொடர்பான நமது இலக்கை 2017-ல் அடைந்து விட்டோம். அமெரிக்காவால் தற்போது என் மீதோ என் நாடு மீதோ போர் தொடுக்க முடியாது. அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் எனது மேஜையில் தான் உள்ளது. இது மிரட்டல் அல்ல உண்மை. நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் கொண்டு அமெரிக்காவின் எந்த இடத்தை வேண்டுமானாலும் தாக்க முடியும்.


அதிக அளவில் ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் நாம் தயாரித்து அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தும் ராணுவ பயிற்சிகளை நிறுத்திக் கொண்டால் நல்லது" என தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமெரிக்கா பல வகைகளில் முயன்று வருகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாமல் வடகொரியா தனது இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலால் எப்போது போர் வெடிக்கும் எனும் அச்சத்துடன் மற்ற உலக நாடுகள் உள்ளன.

இது நாள் வரை தென்கொரியா உடன் விரோத போக்கை மேற்கொண்டு வந்த கிம் முதல் முறையாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து பேசியுள்ளார். தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்பதன் மூலம் இரு நாட்டு மக்கள் இடையேயான ஒற்றுமையை வெளிக்காட்ட முடியும். இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும் என தனது புத்தாண்டு தின உரையில் அவர் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close