ஆப்கான் தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலி

  Anish Anto   | Last Modified : 05 Jan, 2018 02:03 pm

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காபூலில் நேற்று போலீசார் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் போதைப் பொருள் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது அங்கு தீவிரவாதி ஒருவன் போலீஸ் உடையில் வந்துள்ளான். அவனை அடையாளம் கண்டு போலீசார் சுதாகரிப்பதற்குள் தனது உடலில் கட்டி வைத்திருந்த குண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினான்.

இந்த தாக்குதலில் 5 போலீசார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேரை அருகில் இருந்த மற்ற போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அருகில் தான் அமெரிக்க தூதரகம் உட்பட முக்கிய வெளிநாட்டு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு இது வரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே காபூலில் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close