மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க ரூ.450 கோடி!

  SRK   | Last Modified : 10 Jan, 2018 09:18 pm


3 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்றுகொண்டிருந்த MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், 239 பேருடன் மாயமானது. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், உலகின் மிகப்பெரிய புதிர்களுள் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

பல நாடுகளின் உதவியுடன் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில், மலேசியா தேடுதல் பணிகளை நடத்தியது. சுமார் ரூ.1250 கோடி (200 மில்லியன் டாலர்) செலவில் 1,20,000 சதுர கிமீ பரப்பளவில் பல கடற்படை கப்பல்கள் இந்த தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், அந்த விமானம் விழுந்த இடம் தெரியவில்லை. இந்த மாபெரும் தேடுதல் வேட்டை நடந்த இடத்திற்கு அருகே, சுமார் 25,000 சதுர கிமீ கொண்ட கடற்பகுதியில் அந்த விமானம் இருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டதால், அந்த பகுதி இன்னும் தேடப்படாமலே உள்ளது. 

தற்போது, அமெரிக்காவை சேர்ந்த தனியார் ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் மலேசியா ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, அந்த 25,000 சதுர கிமீ பரப்பளவை அந்த நிறுவனம் சோதனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அப்படி அந்நிறுவனம் மாயமான விமானத்தை கண்டுபிடித்தால், மலேசிய அரசு அவர்களுக்கு சுமார் ரூ.450 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால்,  விமானத்தை கண்டுபிடிக்கவில்லை என்றால், எந்த தொகையும் வழங்க மாட்டோம் என்றும்  மலேசியா தெரிவித்துள்ளாதாம்.

சோதனையை நடத்தி முடிக்க அந்த நிறுவனத்துக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் தேடுதல் பணிகள் துவங்குகிறது. இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்த மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லியவ் தியாங் லாய், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் ஏற்கனவே இந்திய பெருங்கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் உறுதி செய்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.