ஆட்கடத்தல், தீவிரவாதத்தை தடுக்க ஆசியான் கூட்டணி

  Shanthini   | Last Modified : 29 Jan, 2018 09:34 am


ஆட்கடத்தல், தீவிரவாதம் போதை மருந்து கடத்தல், சைபர் க்ரைம் உள்ளிட்ட சர்வதேசக் குற்றங்களைத் தடுக்கும் விதமாக இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புக்கு இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது. 

“டெல்லி பிரகடனம்” எனக் குறிப்பிடப்படும் இந்த கூட்டணியின் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், அது தொடர்பான சட்ட அமலாக்கத்தில் ஒத்துழைப்பு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்காசியாவில் அதிகரித்து வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கவும் இது வழிவகுக்கின்றது.  அத்துடன் 2018ம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் தென்கிழாக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு இடையே இணைய உரையாடல் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 

அதோடு இந்தியா- மியான்மர்- தாய்லாந்து இடையேயான முத்தரப்பு நெடுஞ்சாலைப் பணிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்நெடுஞ்சாலை கம்போடியா, லாவோஸ், வியாட்நாம் நோக்கி விரிவாக்கம் செய்யப்படும். 

மியான்மரிலிருந்து ரோஹிங்கிய முஸ்லீம்கள் அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தாய்லாந்து வழியாக மலேசியா, இந்தோனேசியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. கம்போடியா, லாவோசைச் சேர்ந்தவர்களும் வேலை தேடி தாய்லாந்து வழியாக வேறுநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்கின்றனர். இந்த சூழலில் ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்காசியாவில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கியதே தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான். பொருளாதார மற்றும் புவி சார் அரசியல் ரீதியாக இது ஒரு முக்கியமான கூட்டமைப்பு ஆகும். இந்த ஒன்றிணைவின் தொடர்ச்சியாக இந்தியாவின் குடியரசு தின விழாவில் தென்கிழக்காசிய நாடுகளின் பத்து நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close