முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டு சிறை; வங்கதேசத்தில் கலவரம்

  SRK   | Last Modified : 08 Feb, 2018 08:40 pm


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த செய்தி வெளியானவுடன் நாடு முழுவதும் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன.

வங்கதேச தேசிய கட்சியின் தலைவரான ஜியா, 2001 முதல் 2006ம் ஆண்டுவரை பிரதமராக இருந்த போது, அனாதை இல்லத்திற்கு செல்ல வேண்டிய ரூ.1.6 கோடியை மோசடி செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகள் அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டவை என ஜியா தொடர்ந்து கூறி வருகிறார். 

72 வயதான அவர், குற்றவாளி என கூறி அவருக்கு இன்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஜியாவின் வழக்கறிஞர் கூறினார். 

மேல்முறையீடு பதிவு செய்து உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கோருவதற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது ஆகும் என்பதால், ஞாயிறு வரை அவர் கட்டாயம் சிறையில் இருப்பார் என கூறப்படுகிறது.

இந்த செய்தி வெளியானவுடன் வங்கதேசத்தின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close