இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் 70% வாக்குப்பதிவு!

  SRK   | Last Modified : 10 Feb, 2018 09:51 pm


இலங்கை முழுவதும் இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 70% மக்கள் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் 340 உள்ளாட்சி பகுதிகளுக்கு இந்த தேர்தலின் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 8356 இடங்களுக்கு 57,219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலுக்காக, 13,374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 1.5 கோடி வாக்காளர்களில் 70% பேர் வாக்களித்துள்ளததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

2015ல், சிறிசேன, ரணில் விக்ரமசிங்கே கூட்டணியின் ஆட்சி அமைந்த பிறகு, நாடு முழுவதும் நடைபெறும் முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஒழுங்காக நடைபெற, 65,758 போலீஸ் அதிகாரிகள், 41,178 விசேஷ பட அதிகாரிகள் மற்றும் சுமார் 7,000 துணை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close