பொதுமக்களுக்கு போனஸ் வழங்கி அசத்தும் சிங்கப்பூர் அரசு!

  முத்துமாரி   | Last Modified : 20 Feb, 2018 01:35 pm


சிங்கப்பூரில் பட்ஜெட்டில் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதால், அந்தத்தொகை  குடிமக்களுக்கு போனஸாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் கடந்த 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக வருவாயை அந்நாட்டு அரசு ஈட்டியுள்ளது. இதனால் அரசுக்கு 7.6 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.49,000 கோடி) அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இந்த தொகையை அரசு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது  போக மீதியுள்ள பணத்தை மக்களுக்கு போனஸாக வழங்க அரசு முடிவு செய்து அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் அரசு. 

இதுகுறித்து அரசு தரப்பில் கூறியதாவது, "மக்களின் மாத வருவாய்க்கு ஏற்ப இந்த வருவாய் தொகை பகிர்ந்தளிக்கப்படும். இதற்கு 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.  இதில் 27 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இதில் சிறிது தொகையானது சிங்கப்பூர் அரசு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதியுள்ள 533 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3500 கோடி) மக்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது. இதன்படி, அவர்களின் வருவாய்க்கு ஏற்ப ஒருவருக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close