மலேசிய பிரதமரை கேலியாக சித்தரித்த கார்ட்டூனிஸ்ட் கைது!

  முத்துமாரி   | Last Modified : 21 Feb, 2018 01:55 pm


மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை கோமாளி போன்று சித்தரித்து கார்ட்டூன் வரைந்த நபரை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாஹ்மி ரேசா, பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும், கருத்துகளையும் பரப்பி வருகிறார். பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து வரும் அவர் சமீபத்தில் பிரதமரை கோமாளி போன்று சித்தரித்து ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட கார்ட்டூன் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதனையடுத்து மலேசிய அரசு கார்ட்டூனிஸ்ட் பாஹ்மி ரேசா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. அவருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனையும், 7700 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம்) அபராதமும் விதித்துள்ளது. 

இதுகுறித்து கார்ட்டூனிஸ்ட் பாஹ்மியின் வழக்கறிஞர் தெரிவிக்கையில், "எதன் அடிப்படையில் பாஹ்மிக்கு தண்டனை வழங்கப்பட்டது என தெரியவில்லை. கண்டிப்பாக இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என்றார்.

அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் கருத்துக்கள், படங்கள் வெளியாகும் வலைத்தளங்களை முடக்கி வருவதும் மலேசியாவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close