ஃபேஸ்புக் மிருகம் போன்றது: ஐ.நா. பகிரங்க குற்றச்சாட்டு

  PADMA PRIYA   | Last Modified : 13 Mar, 2018 12:32 pm

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பரப்பப்பட்டதில் பேஸ்புக்குக்கு பெரும் பங்கு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியுள்ளது. 

மியான்மர் பிரச்னைகள் குறித்த நிலவரங்களை சேகரிக்கும் ஐ.நா.-வின் உண்மை கண்டறியும் சுதந்திர அமைப்பின் செயலர் மார்ஸூகி டாருஸ்மன் கூறும்போது, "மியான்மரிலிருந்து 650,000-க்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் வெளியேறியுள்ளனர். இதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அபரிவிதமானது. பேஸ்புக் என்றால் சமூக வலைதளம், சமூக வலைதளம் என்றால் அதே ஃபேஸ்புக் தான். ஆனால் அந்த நிறுவனம் அந்தப் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். 

அதில் ரோஹிங்கியர்களௌக்கு எதிராக பரப்பப்பட்ட வெறுப்பு கருத்துக்களும் அதன் வெளிப்பாடும் கவனிக்க வேண்டியவை. ஃபேஸ்புக் மிருகத்தனமாக உள்ளது. ஃபேஸ்புக் அதன் நோக்கத்தை விடுத்து வேறு விதமாக செயல்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள இனமோதல்களை அடுத்து அங்கு சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் அவசியமானது " என்று அவர் கூறினார். 

ஐ.நா.  அமைப்பின் இந்த பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் உடனடியாக எந்த பதிலை அளிக்கவில்லை. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close