ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல்; 39 தீவிரவாதிகள் பலி

  SRK   | Last Modified : 18 Mar, 2018 10:54 am


கடந்த 24 மணி நேரத்தில், ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதல்களில், 39 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கான் அரசு நடத்திவரும் தொடர் வான்வழி தாக்குதல்களில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, ஆப்கான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஹெம்லாந்து பிராந்தியத்தில் நடைபெற்ற தாக்குதல்களில், நட் அலி மற்றும் மர்ஜா என்ற ஊர்களில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது ஆயுதங்களும் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளனர்.

அதேபோல, சோரா என்ற ஊரில், தீவிரவாதிகளின் தளத்தை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் கொல்லப்பட்டதோடு, அந்த தளம் முற்றிலும் அழிக்கப்பட்டது. 

இன்று, ஆப்கான் ராணுவம் ஹஸ்கா மினா என்ற பகுதியில் நடத்திய டிரோன் தாக்குதல்களில், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் ஐ.எஸ்  தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close