வடகொரிய அதிபர் கிம், சீனாவுக்கு ரகசிய பயணம்?

  SRK   | Last Modified : 27 Mar, 2018 09:51 am


வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் ஊன், இன்று சீனா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால்,  சீனா தரப்பிலும், வடகொரியா தரப்பிலும் இதுகுறித்து உறுதிபடுத்தப்படவில்லை. 

சீன தலைநகர் பீஜிங்குக்கு ஒரு சிறப்பு ரயில் வந்தது. அதற்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டதுடன் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வடகொரியாவின் உயரதிகாரி ஒருவர் சீனாவுக்கு வந்துள்ளதாக ஜப்பான் நாட்டு ஊடகம் தெரிவித்தது. 

அதன்பின்னர், அது வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊன் என கூறப்பட்டது. அதிபர் கிம் ஜான் ஊனின் தந்தை, முன்னாள் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் இல், இதேபோன்ற ஒரு ரயிலில் சீனாவுக்கு வருவது வழக்கம் என்பதால், சீனா வந்திருப்பது கிம் ஜாங் ஊன், என பல தரப்பில் கூறப்படுகிறது. 

சமீபத்தில் அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலும் வருங்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வடகொரியாவின் மிக நெருக்கமான நட்பு நாடான சீனா, தனது உறவை பலப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது, என நிபுணர்கள் கூறுகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close