தலிபான் தாக்குதல்; 23 ஆப்கான் ராணுவ வீரர்கள் பலி

  SRK   | Last Modified : 24 Feb, 2018 09:43 pm


இன்று ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில், 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

நேட்டோ தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட உயர் அதிகாரிகள், ஆப்கானுக்கு இன்று வந்தனர். அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர்கள் வந்திருந்த நிலையில் தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நள்ளிரவில், ராணுவத்தின் சிறிய சோதனை சாவடிகளையும், பாதுகாப்பு தளங்களையும் குறிவைத்தனர் தீவிரவாதிகள். ராணுவம் பயன்படுத்தும் பெரிய கார் ஒன்றில் வெடிகுண்டுகளை நிரப்பி, அதை சோதனை சாவடியில் வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரம், மற்றொரு தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து, அதே போன்ற ராணுவ கார் திருடப்பட்டது. அடுத்த தாக்குதலில் பயன்படுத்த அந்த காரை திருடியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மொத்தம் 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் தரப்பில் கூறப்படுகிறது. தலிபான் தரப்பில் வெளியான தகவலின் படி, 25 ஆப்கான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 பேரை கடத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close