நேபால் விமான விபத்து; பலி 50ஆக உயர்வு

  SRK   | Last Modified : 12 Mar, 2018 08:33 pm


வங்கதேச தலைநகர் தாக்காவில் இருந்து சென்ற பயணிகள் விமானம், நேபால் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

78 பேர் பயணிக்கக்கூடிய பம்பார்டியர் டேஷ் 8 என்ற விமானம், தாக்காவில் இருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 67 பயணிகள் மற்றும் 4 பணியாட்கள் இருந்தனர். மதியம் 2.20 மணியளவில், காத்மாண்டு நகரின் திரிபுவன் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானம் ஓடுதளத்தில் இருந்து தடம்மாறி, உடனடியாக தீ பிடித்து எரிந்தது. 

விமான நிலையம் மூடப்பட்டு, உடனடியாக மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக தற்போது உயர்ந்துள்ளது. 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தரையிறங்கும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "விமானத்துக்காக திறக்கப்பட்ட ஓடுதளத்தின் தெற்கு பகுதியில் இருந்து விமானம் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால், வடக்கு பகுதியில் இருந்து தரையிறங்கியது. அது தான் விபத்துக்கு காரணம். சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என நேபாளத்தின் விமானத்துறை அதிகாரி சஞ்சீவ் கவுதம் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close