45 நாட்களுக்கு பின் மாலத்தீவுகள் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது

  SRK   | Last Modified : 22 Mar, 2018 06:46 pm


மாலத்தீவுகள் நாட்டில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 45 நாட்களுக்கு பின்னர், இன்று அதிபர் அப்துல்லா யமீன், அதை திரும்பப் பெற்றார்.

சமீப காலமாக சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய பிரச்னைகளுள் ஒன்று மாலத்தீவுகள் நாட்டு அரசு தான். அதிபரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின், அதிபருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். 

இதனால், அதிபர் அப்துல்லா யமீன், அவசர நிலையை 15 நாட்களுக்கு பிரகடனப்படுத்தினார். இந்த அவசர நிலையின் போது, அவர் பல எதிர்க்கட்சி தலைவர்கள், போராட்டக்காரர்களை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும், யாரும் எதிர்பாராத விதமாக, மாலத்தீவுகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். 

அவசர நிலை மேலும் இரண்டு முறை நாடாளுமன்றத்தால் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவசர நிலையை திரும்பப் பெறுவதாக அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் ரிலீஸ் செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த பிரச்னை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தாலும், மாலத்தீவு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாவில்லை என்றும், சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் வழக்கம் போல இருந்தது என்றும் அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிபரின் செயல்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close