இலங்கையில் மூண்டது மதக் கலவரம் - அவசரநிலை அமல்!

  PADMA PRIYA   | Last Modified : 06 Mar, 2018 08:04 pm

இலங்கையின் மத்திய மாகாணமான கண்டியில் சிங்கள - இஸ்லாமிய குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு கலவரம் உருவெடுத்ததில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இடைக்கால ஊரடங்கு இருந்தும் நிலைமை சீராகததை அடுத்து இலங்கை முழுவதிலும் அடுத்த 10 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27-ஆம் தேதியன்று அம்பாறை மாவட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து கண்டியில் இஸ்லாமிய சமூகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிங்கள வாலிபர் ஒருவர் காயமடைந்தார். அந்த வாலிபர் மரணமடையவே இது சிங்களவர் இஸ்லாமியர் இடையேயான கலவரமாக மாறியது.

இஸ்லாமிய இளைஞரின் வீடு எரிப்பு: ஞாயிறு இரவு மர்ம பவுத்த கும்பல் ஒன்று இஸ்லாமிய இளைஞரின் வீட்டைத் தாக்கி எரித்தனர். இதனை அடுத்து இந்தப் பிரிவினரை பழிவாங்கும் வகையில் கடந்த 4-ஆம் தேதி கண்டி மாவட்டத்தில் தாக்குதல் நடைபெற்றது. பல இடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக கண்டி மாவட்டம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். கடைகள், வழிபாட்டுத்தலங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு: தலைநகர் கொழும்பில் இருந்து கண்டி மாவட்டத்திற்கு போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. நிலைமை விபரீதம் ஆவதை தடுக்கும் வகையில் நேற்று இந்தப் பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதிலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு: இந்த நிலையில் வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் இன்றிலிருந்து 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வன்முறையான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நடந்த அவசரக் கூட்டத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.