போர் நிறுத்தம் அறிவித்த முதல் நாளே தாக்குதல்; 25 பேர் பலி

  shriram   | Last Modified : 12 Jun, 2018 10:21 pm
taliban-launches-attacks-on-day-of-ceasefire-kills-25-people

ஆப்கானிஸ்தான் அரசும் தலிபான் தீவிரவாத அமைப்பும் ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட முதல் நாளே தலிபான் நடத்திய தாக்குதல் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தொடர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாத அமைப்புடன், ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்த உடன்படிக்கைக்கு வர ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து தலிபான் அமைப்பும் இந்த போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இன்று முதல் துவங்கும் போர் நிறுத்தம், ஜூன் 20ம் தேதி வரை தொடரும் என கூறப்பட்டது. 

ஆனால்,  முதல் நாளே, தலிபான் தீவிரவாதிகள் கொஹிஸ்தான் பகுதியில் நடத்திய அதிரடி தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கான் அரசை திசைதிருப்பிவிட்டு, கொஹிஸ்தானை கைப்பற்ற தலிபான் திட்டமிட்டதாக தெரிகிறது. கொஹிஸ்தானின் ஆளுநர் அப்துல் ரஹ்மான் பனா மற்றும் பாதுகாப்புப் படையினர் 16 பேர் இதில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் எதிர்பாராத நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close