ஆப்கான் தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட 19 பேர் பலி

  Newstm News Desk   | Last Modified : 02 Jul, 2018 01:39 am

afghanistan-19-killed-in-suicide-blast

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். 

ஜலாலாபாத்தில், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதிபரை சந்திக்க இந்து மற்றும் சீக்கிய சமுதாயங்களை சேர்ந்த அப்பகுதி மக்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, முக்காபிராத் என்ற மார்க்கெட் பகுதியில் திடீரென தற்கொலைப் படை தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்தான். அந்த பகுதியில் இருந்த பலர் படுகாயமடைந்தனர். 

உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 19 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள ஆளுநர் மாளிகைக்கு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ஜலாலாபாத்துக்கு வந்துள்ள அதிபர் கானி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த சமயம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்றும், 19 பேர் இறந்துள்ளதாகவும், ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் கியோக்யானி தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close