ஹாலிவுட் படமாகவும் அருங்காட்சியகமாகவும் மாறும் தாய்லாந்து குகை!

  Padmapriya   | Last Modified : 14 Jul, 2018 05:13 am

thailand-cave-museum-and-film-in-the-works-for-tham-luang

தாய்லாந்து குகையில் 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்தாட்ட பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டு பின் மீட்கப்பட்ட சம்பவம் ரூ.413 கோடி செலவில் ஹாலிவுட் திரைப்படமாக உள்ளது. இதே போல, சர்வதேச அளவில் பேசப்பட்ட தாம் லுவாங் குகை, அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று தாய்லாந்து அரசும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையிலிருந்து 13 பேர் மீட்கப்பட்ட சம்பவத்தை படமாக்க ஹாலிவுட் திரையுலகின் 2 முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தன. இந்த நிலையில் யூஎஸ்  ஸ்டூடியோ ப்யூர் ஃப்லிக்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாக முடிவாகியுள்ளது. சுமார்  ரூ.413 கோடி செலவில் உருவாக இருக்கும் இந்தப் படத்துக்காக மிகவும் அபாயகரமான மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களை சந்தித்து தங்களது அனுபவங்களை கேட்டறிந்து வருகிறதாம் அந்தப் படக் குழு. 

யூஎஸ் ஸ்டூடியோ ப்யூர் ஃப்லிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவரான மைக்கெல் ஸ்காட் தாய்லாந்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி சமன் குனான், மீட்புப் பணியின் போது உயிரிழந்த தாய்லாந்து கடற்படை வீரரும் சிறுவயதில் ஒரே பகுதியில் வளர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. எனவே அவரை மையப்படுத்தி இந்தக் கதை அமையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. படக் குழுவை முழுவதுமாக தேர்வு செய்யும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. 

இதனிடையே, தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " தாம் லுவாங் குகை விரைவில் அருங்காட்சியகமாக மாற்றப்படும். பயணிகள் அனைவருக்கும் சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கக் கூடிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கண்காணிக்கும் விதமாக இனி பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தப்படும்" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close