இந்தோனேசிய தீவில் கடும் நிலநடுக்கம்: 13 பேர் பலி, அச்சத்தில் மக்கள்

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 04:31 pm
magnitude-6-4-earthquake-hits-indonesia

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ரிக்டரில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் பலியானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தளம் பாலி. பாலித் தீவுக்கு சற்று தொலைவில் இருப்பது லம்போக் தீவு. குட்டித் தீவுகள் அதிகம் உள்ள இந்தோனேசியாவில அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்தோனேசியா தீவு பசிபிக் பெருங்கடலின் ரிங் ஆப் ஃபைர் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது.  இது எரிமலைகள் அமைந்த வளைவு பகுதியில் உள்ளதனால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு லேலாங்கென் பகுதிக்கு தென்மேற்கே 1.4 கிலோ மீட்டர் தொலைவில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக் கருதி நிலநடுக்கத் தொடக்க நிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடும் நிலநடுக்கத்தினால் 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே 13  பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பரில் 26ஆம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 என்ற அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது.  இதனால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close