மேம்பாலத்தை தூக்கி நிறுத்தும் ராட்சத கைகள்... வியட்நாமில் உருவாக்கப்பட்டுள்ள அதிசயம்!

  Padmapriya   | Last Modified : 02 Aug, 2018 08:17 pm
viral-vietnam-s-golden-bridge-is-in-the-hands-of-the-gods

வியட்நாமில் பா நா என்ற மலைப்பகுதிக்கு இடையே கோல்டன் ப்ரிட்ஜ் என அழைக்கப்படும் தங்க மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அதிக  அளவிலான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

வியட்நாமின் தானாங் என்ற இடத்தில் பா நா மலைப்பகுதி உள்ளது. இங்கு 150 மீ நீளம் கொண்ட மேம்பாலம் மலைகளுக்கு இடையே மிக பிரம்மாண்டமாகவும் கலை உணர்வுடனும் புதுப்பிக்கப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கடந்த 1919 ஆம் ஆண்டு, பிரெஞ்சு காலனியர்கள் உருவாக்கிய இந்த மலைப்பாதையை வியட்நாம் சுற்றுலா துறையினர் புதுப்பித்துள்ளனர்.  2 பிரம்மாண்ட கைகள் மரங்களிலிருந்து வந்து பெரும் தங்க மேம்பாலத்தை தாங்கி நிற்பதாக அதன் வடிவமைப்பு உள்ளது. 

மத்திய வியட்நாம் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடத்தில் மலைகளுக்கு இடையே மேகங்கள் ஊர்ந்து செல்வதை மிக அருகே இருந்து பார்க்கும் அளவிற்கு இந்த மேம்பாலத்தின் நேர்த்தி உள்ளது. இதனால் பா நா மலைப்பகுதி பிரபலமான சுற்றுலா தளமாக மாறி வருகிறது. கோட்டை, தோட்டங்கள், மெழுகு சிலை அருங்காட்சியகம், போன்றவை இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது

இந்த பாலத்தை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கடவுளின் கரங்களில் பாதுகாப்பாக இருப்பதை போன்ற உணர்வு இந்த தங்க நிற பாலத்தை கடக்கும்போது ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். அந்த அளவிற்கு இயற்கையினுள் நுழைவதாய் அதன் கட்டுமானம் அமைந்துள்ளது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close