இந்தோனேசிய நிலநடுக்கம்: 10 அங்குலம் உயர்ந்த லம்போக் தீவு

  Padmapriya   | Last Modified : 13 Aug, 2018 11:01 pm
indonesian-island-lifted-10-inches-by-deadly-quake

இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகளால் அதன் லம்போக் தீவே 10 அங்குலம் உயரந்துள்ளது. 

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் கடந்த 5ம் தேதி அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது. 270,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 68,000 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.  இதனால் லம்போக் தீவில் புவியியல் ரீதியான மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீவில் மட்டும் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது.  மேலும், 500 தடவைக்கும் மேல் நிலஅதிர்வுகள் இங்கு உணரப்பட்டது. லம்போக் மிகப் பிரபலமான அதிகம் வளர்ச்சியடையாத சுற்றுலா தீவு ஆகும். இங்கு நிலநடுக்கத்தில் சிக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா பயணிகள் ஆவர்.

இந்த நிலையில் லம்போக் தீவில் தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்த தீவு வழக்கத்தை விட 10 அங்குலம் உயர்ந்துள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் நாசா மற்றும் கலிபோர்னியா புவியியல் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு நடத்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தோனேசியாவில் மற்ற சில பகுதிகளின் நிலப்பரப்பு  2 முதல் 6 அங்குலம் உயர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 என்ற அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது.  இதனால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர். இதில் இந்தோனேசியா மிகப் பெரிய பேரழிவை சாதித்தது.  இந்தோனேசியா பூமியில் நெருப்புவளையம் எனப்படும் பகுதியில் உள்ளது. அதாவது பசிபிக் பகுதியில் 450 எரிமலைகளை கொண்ட பகுதி தான் இது. உலகின் பயங்கர எரிமலைகளில் அபாயகரமானவை இங்கு தான் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close