60 ஆண்டுகளுக்குப் பிறகு மகனை சந்தித்த தாய்: உணர்வு பொங்கிய கொரியர்கள் 

  Padmapriya   | Last Modified : 22 Aug, 2018 06:59 am

separated-korean-families-have-2nd-day-of-emotional-reunions

கொரியப் போரில் பிரிந்து இரு வேறு நாடுகளில் வாழ்ந்த குடும்பத்தினர் 67 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணையும் நிகழ்வு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. 

1953-ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொரியா நாடு வடகொரியா, தென்கொரியா என இரண்டாக பிரிந்தது. பின்பு வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் போர் ஏற்பட்டது. 

இந்த நிலையில் 67 ஆண்களுக்குப் பிறகு பிரிந்து போன குடும்பங்கள் ஒன்றாக இணையும் நிகழ்வு நடைபெற்றது. வட கொரியா அணுஆயுதத்தை கைவிடுவதாக கூறியதை அடுத்து அங்கு அமைதி நிலைக்கு ஆயத்தமான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவுக்குச் சென்று போரின்போது பிரிந்த தங்கள் உறவினர்களைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு வடகொரியாவின் சுற்றுலாத் தலமான மவுண்ட் கும்காங் என்ற இடத்தில் நடந்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,   89 வயதான சோ சன் டு தனது மூத்த சகோதரி பற்றிக் கூறும்போது,  "எனக்கு நினைவிருக்கிறது நீ எவ்வளவு அழகாக இருப்பாய் என்று... உன்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

வடகொரியாவில் இருந்து 83 பேரும், தென் கொரியாவில் இருந்து 89 பேரும் இதில் பங்கெடுக்கின்றனர்.மற்றொரு தாய் தனது மகனை சந்தித்தார். லீ கியும் சியோம் என்ற அவர் தனது மகனை அவரது நான்கு வயதில் பிரிந்தார். அவர் கூறுகையில்'' இந்த நாள் வரும் என நான் கனவிலும் நினைத்ததில்லை. என் மகன் உயிருடன் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. எனக்கு 90 வயதுக்கு மேலாகிவிட்டது. எப்போது நான் இறப்பேன் என்பது எனக்குத் தெரியாது. இந்த நிகழ்வு என்னை என அவர் கூறியுள்ளார்மகிழ்ச்சியடைய செய்துள்ளது''  என்றார். 

பல ஆண்டுகளாக பிரிந்திருந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அழுதனர். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்வதாக அமைந்தது. இரணடாவது கட்டமாக இந்த வாரம் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சந்தித்துப் பேச உள்ளனர். 

 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.