ஆப்கான் மாளிகை மீது தாக்குதல்: அதிபரின் பக்ரீத் உரையின்போது அசம்பாவிதம்

  Padmapriya   | Last Modified : 22 Aug, 2018 01:32 pm
taliban-rockets-were-fired-toward-afghanistan-s-presidential-palace-during-holiday-speech

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி மாளிகையிலிருந்து நேரலையில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது அதிபர் மாளிகையை குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

ஆப்கானிஸ்தானில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதிபர் அஷ்ரப் கனி, அதிபர் மாளிகையில் இருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அதிபர் மாளிகையை குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது மற்றொரு ராக்கெட் தாக்கியது. இது தூதரக வளாகத்திலேயே விழுந்தது. பதிலுக்கு ஆப்கானிஸ்தான் விமானப் படை மற்றும் அமெரிக்க விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் ராக்கெட் ஏவப்பட்ட இடத்ததை முற்றுகையிட்டு குண்டுகளை வீசினர். 

இந்தச் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ''தாக்குதல் மூலம் ஆப்கானிஸ்தான் மக்களை வீழ்த்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள்'' என்று கூறியுள்ளார். 

பக்ரீத்தை ஒட்டி தலிபான்களுடன் சண்டை நிறுத்தம் கடைப் பிடிக்கப்படும் என்று அதிபர் அஷ்ரப் கனி அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து தலிபான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் 3 பேருந்துகளை தாலிபான் தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர். அதில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100 பேரை கடத்தி பிணைக் கைதிகளாக அறிவித்து அழைத்து சென்றுள்ளனர்.  பின்னர் ஆப்கான் படைகள் தாக்குதல் நடத்தி பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 

கடந்த ஒரு மாதத்தில், தீவிரவாத தாக்குதலில் காபூல் நகரில் மட்டும் குறைந்தபட்சம் 100 பாதுகாப்பு அதிகாரிகளும், பொதுமக்கள் 35 பேரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close