இந்திரா நூயிக்கு ஆசியா கேம் சேஞ்சர் விருது!

  Padmapriya   | Last Modified : 26 Aug, 2018 01:58 pm
asia-society-to-honour-pepsico-ceo-indra-nooyi-as-game-changer-of-the-year

'பெப்சிகோ' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள இந்திரா நுாயிக்கு இந்த ஆண்டுக்கான 'ஆசியா கேம் சேஞ்சர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆசிய கலாசார மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் தடைகளை உடைத்து தைரியத்துடன் சாதனை படைக்கும் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு 'ஆசியா கேம் சேஞ்சர்' விருது வழங்குகிறது.  இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சென்னையை சேர்ந்த இந்திரா நுாயி (62) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

மனித நேயமிக்க தலைமை, தொழில் சாதனை மற்றும் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து, உணவு, ஊட்டச்சத்து, தண்ணீர், காலநிலை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விவகாரங்களில் பணியாற்றியதற்காக இந்திரா நுாயிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பெப்சிகோ' தலைமை நிர்வாகியாக இந்தியாவின் சென்னையை சேர்ந்த இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தார். 26 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் 3வது தலைமை நிர்வாகியாக இருந்த நூயி பதவிஇலிருந்து இறக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரமோன் லகார்டா(54) பொறுப்பேர்பார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close