மியான்மரில் அணை உடைந்து வெள்ளம்: தத்தளிக்கும் 85 கிராமங்கள் 

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2018 04:51 pm
myanmar-dam-breaks-38-villages-under-water

மியான்மர் நாட்டில் அணையில் உடைப்பு ஏற்பட்டு கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 

மியான்மரில் தொடர் மழையால் ஸ்வார் கிரீக் என்ற பகுதியில் உள்ள ஸ்வார் சாவாங் அணை திடீரென உடைந்தது. நெடுங்காலமாக பாராமரிப்பு இன்றி இருந்த நிலையில்,  தண்ணீர் தேக்கமடைந்ததால் அணையில் புதன்கிழமை காலை 5.30 மணியளவில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனால் அங்கு சுற்றுவட்டார பகுதியில் 85 கிராமங்களில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமானோர்  சிக்கியுள்ளனர். ராணுவத்தினர் இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தும் நைபிடாவ், யாங்கூன் ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தால் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

உடைந்த ஸ்வார் சாவாங் அணை 2001-ஆம் ஆண்டில் பாசனத்துக்காக கட்டப்பட்டது. இதனிடையே இந்த அணை உடைந்ததற்கு காரணம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த நீர் பாசனத் துறை அதிகாரிகள், அணை சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததால் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close