குழந்தைக்கு பாலூட்டியபடி தேர்வெழுதிய ஆப்கானிஸ்தான் தாய்!

  PADMA PRIYA   | Last Modified : 22 Mar, 2018 07:36 pm

ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவா் 2 மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தரையில் அமா்ந்து தோ்வெழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு நடைபெற்றது. இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் கலந்து கொண்டு தோ்வு எழுதினாா். ஜஹான் டாப் என்ற அப்பெண் தோ்வு எழுதிக்கொண்டு இருந்தபோது அவரது இரண்டு மாத கைக்குழந்தை அழுதுள்ளது. அவர் அனுமதிபெற்று, தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டினார். உடனடியாக அந்தப் பெண் குழந்தையை மடியில் ஏந்தியவாறு நாற்காலியில் இருந்து இறங்கி பாலூட்டியவாறு தரையில் அமா்ந்து தோ்வை தொடா்ந்து எழுதியுள்ளார்.

இதனை கண்ட தோ்வு கண்காணிப்பாளா் அப்பெண்ணை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இதனைப் பலரும் பகிர்ந்து அப்பெண்ணுக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர். மறுபுறம், பாலூட்டுவது பசித்தால் உண்பது போல இயல்பானது, எனவே இத்தகையான செயலை பெரிதுபடுத்தி பார்க்க வேண்டாம் என்றும் சிலர் கருத்துக் கூறி வருகின்றனர்.

இளம் பெண் ஜஹானுக்கு மூன்று குழந்தைகள். தேர்வு எழுவதற்காகவே எட்டு மணி நேர பயணம் மேற்கொண்டு காபூலுக்கு வந்திருக்கிறார். இவருடைய கணவர் ஏழை விவசாயி. இருப்பினும் தன்னுடைய மனைவி படிக்க வேண்டும் என்பதற்காக அழைத்து வந்திருக்கிறார். தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில், ஒரு பெண், குழந்தை பெற்ற பிறகும் கூட படிக்க வேண்டும் என்ற ஆசையில் தேர்வு எழுத வந்திருந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயம்தான் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close