இந்தோனேசிய நகரில் ஆண் - பெண் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 08:25 pm

ultra-conservative-indonesian-district-bans-unmarried-couples-from-dining-together

இந்தோனேசிய நகரில் கணவர் அல்லது உறவினர் அல்லாத ஆண் - பெண் பொது உணவகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியாவில் பாந்தா ஆச்சே என்ற இடம் சிறப்பு குடியாட்சியுரிமை பெற்றதாகும். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்த இடத்தில் சுய சட்டவிதிகள் அவ்வப்போது மாற்றப்படுகிறது. இஸ்லாமிய ஷரிய சட்டம் அமலில் இருக்கும் பகுதியில் பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுபாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தலையை மூடிய துணி அணிய வேண்டும், இறுக்கமான உடை அணியக் கூடாது, கூத்தாடக் கூடாது, மதுவுக்கு தடை, ஓரினச் சேர்க்கை போன்ற சட்டங்கள் உள்ளது. மீறி இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு பொது வெளியில் பிரம்படி தண்டனை வழங்கப்படுகிறது. 

அதன்படி, உணவங்களுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக உணவருந்த வரும்  பெண்களுக்கு உணவு வழங்க கூடாது. திருமணமாகாத அல்லது உறவினர் இல்லாத ஆணுடன் பெண் ஒன்றாக அமரக்கூடாது போன்ற விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.  

தற்போது கட்டுபாடுகளாக விதிக்கப்பட்டுள்ள இந்த சட்டங்கள், பின் நாட்களில் தண்டனைக்குரிய சட்டமாக மாற்றப்படும் என்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவை அனைத்தும் பெண்களின் நலனுக்காக தான் கொண்டுவரப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். 2016ஆம் ஆண்டே இந்த விதி இயற்றப்பட்டதாகவும், ஆனால் சரிவர பின்பற்றபடாததால் மீண்டும் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நகர அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

இதே போல, கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வடக்கு மாகணத்தில் பெண்கள் பைக்கில் ஒரு பக்கமாக உட்கார கூடாது என தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.