சில்மிஷம் செய்த இந்தியர்: உதட்டை கடித்து அனுப்பிய தாய்லாந்து பெண் 

  Padmapriya   | Last Modified : 23 Sep, 2018 02:09 am

thai-woman-claims-self-defence-after-biting-indian-tourist-s-lip-in-pattaya

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர் அங்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்க அவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள அந்த இளைஞரின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த சாஷாங்க் அகர்வால். இவர் தனது தனது நபர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவுக்கு பெயர் போன தாய்லாந்தில் மசாஜ் சென்டர்கள் மிகவும் பிரபலம். 

இதற்காகவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர்.  பாலியல் தொழில் அங்கு சட்டபூர்வமாக உள்ளது. இந்த நிலையில் அகர்வால், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தாய்லாந்தில் உள்ள பட்டாயா பகுதியில் வாக்கிங் சென்று உள்ளார். அப்போது வழியில் வீடு திரும்பி கொண்டிருந்த, அந்நாட்டு பாலியல் தொழிலாளியான சுகன்யா பபேக் என்ற  பெண்ணிடம் பேசிக் கொண்டே நடந்து உள்ளார். அப்போது  திடீரென அந்த பெண் மீது கை வைத்து பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்துள்ளார். 

நடுரோட்டில் நடந்த சம்பவத்தால் பதற்றமடைந்த அந்த பெண் தவறாக நடக்க முயன்ற சாஷாங்கை தள்ளி கீழ் உதட்டை பலமாக கடித்து துப்பியுள்ளார். வலியால் துடி துடித்த அகர்வாலை கண்ட அருகில் இருந்தவர்கள் போலீஸில் புகார் தெரிவித்தார். உடனடியாக விரைந்த போலீசார் அகர்வாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து போலீசார் சுகன்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, எனக்கு அவர் யார் என்று தெரியாது. நான் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, ஹலோ ஹாய் என ஆரம்பித்தார். நானும் பேசினேன். அப்போது திடீரென என் மீது கை வைத்து என் கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றார். என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாதுகாப்பு கருதி நான் அவரை தாக்கினேன். இதில் என் மீது எந்த தவறும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். சுகன்யா அதிக விலை கேட்டதாகவும் அதற்காக அவரை அடித்ததாகவும் சாஷாங்க் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சை பெற்ற சாஷாங்க், கிழிந்த உதட்டுடன் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.