ஆங் சாங் சூகியின் கவுரவ குடிமகள் பட்டத்தை பறித்து கனடா அதிரடி

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2018 01:23 pm
canada-strips-myanmar-s-aung-san-suu-kyi-of-honorary-citizenship

மியான்மர் நாட்டில் வசித்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக எழுந்து குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்காத அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த  கவுரவ குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப் பெறுவதாக கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டின் வடக்கு மாகாணமான ராக்கைனில் ரோஹிங்க்யா இன முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் வசித்து வந்த இந்துக்கள் மீது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பாரபட்சமின்றி கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு ஏராளமானவர்களை கொன்று குவித்தனர்.

அதையடுத்து அந்த நாட்டு ராணுவம் ரோஹிங்க்யா இன முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.  இதில் பாதிக்கப்பட்ட ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்க்யா முஸ்லிகள் இந்தியா மற்றும் வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சமடையத் தொடங்கினர்

ரோஹிங்க்யா முஸ்லிம்களை கையாளுவது மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளுக்கும் பெரும் பிரச்னையாக தற்போது வரை இருந்து வருகிறது. இதனிடையே ரோஹிங்க்யாக்கள் மீது மியான்மர் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில்  ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதாக உலக அளவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்களை  மியான்மர் தேசத்து  ராணுவம் கையாண்ட விதம் குறித்து கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்து வந்தார். அதையடுத்து ஆங் சாங் சூகிக்கு கடந்த  2007 ஆம் ஆண்டு கனடா அரசு வழங்கியிருந்த கவுரவ குடியுரிமையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகில் சிறப்பான செயல்கள் புரிந்த பிற நாட்டுத் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக கனடா நாட்டு அரசு கவுரவ குடியுரிமை பட்டத்தை அத்தைகைய தலைவர்களுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close