இந்தோனேசிய பேரிடரின்போது 1200 கைதிகள் தப்பியோட்டம் 

  Padmapriya   | Last Modified : 01 Oct, 2018 10:29 pm
mass-burials-as-death-toll-in-indonesia-quake-tsunami-tops-800

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தின்போது சிறைசாலையின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக 1200 கைதிகள் திப்பி ஓடியுள்ளனர். 

இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிகிழமை சுலவேசி தீவில் 7. 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் சின்னாபின்னமானது. அதனைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி பேரலைத் தாக்கியது.   

இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது சுற்றுச்சுவர் இடிந்ததால் பலு மற்றும் டோங்கலா சிறைகளில் இருந்து 1200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர்.  நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறை வளாகத்தில் புகுந்த நீர் ஆகியவற்றால் உயிர் பயத்தாலும், தங்கள் குடும்பத்தினரின் விவரம் அறியவும் குற்றவாளிகள் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

ஆயிரத்தை தொடும் பலி எண்ணிக்கை! 

நிலநடுக்கம், சுனாமி, அடுத்தடுத்து 170 முறை நில அதிர்வுகள் என இயற்கை பேரழிவு இந்தொநேசியாவை புரட்டிப்போட்டுள்ளது.  இதன் பாதிப்புகளால் 
பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

கடந்த இரண்டு நாட்களாக இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் பலர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். பேரலை ஓய்ந்து சடலங்கள் ஆங்காங்கே ஒதுங்கியுள்ளன. மனித உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், தொற்றுநோய் பரவாமல் தடுக்க  சடலங்களை ஒரே இடத்தில் குவியலாக புதைக்க மிகப்பெரிய சவக்குழி தோண்டப்படுகிறது. இது போன்ற காட்சிகள் அங்கிருக்கும் மக்களையும் மீட்புக் குழுவினரையும் பதைப்பதைக்க வைப்பதாய் உள்ளது. 

இவற்றை அப்புறப்படுத்தி அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மனித உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைத்துச் சடலங்களையும் ஒரே இடத்தில் புதைக்க மிகப்பெரிய சவக்குழி தோண்டப்படுகிறது.காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 

தற்போது இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் மாட்டிக் கொண்டிருப்பவர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.  

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close