ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டுவெடிப்பு; 14 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 09:22 pm
suicide-bombing-in-afghan-election-rally-14-killed

ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் பகுதியில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 47 பேர் காயமடைந்தனர். 

நங்கர்ஹர் பகுதியில் உள்ள காமா என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் நாசர் மொஹ்மந், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தினார். மதியம் 1.30 மணியளவில், கூட்டத்திற்கு வந்த தீவிரவாதி, தன் உடலில் இணைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 14 பேர் கொல்லப்பட்டனர் ; 47 பேர் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் மொஹ்மந்தும் இந்த சம்பவத்தில் காயமடைந்தார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக, நங்கர்ஹர் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

 வரும் 20ம் தேதி, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 249 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில், 2691 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த வருடத்தில் மட்டும், வெவ்வேறு தாக்குதல்களில் 50 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close