புற்றுநோய் பாதித்த பறவைக்கு செயற்கை அலகு 

  Padmapriya   | Last Modified : 04 Oct, 2018 02:04 pm
3d-printed-prosthesis-boosts-odds-of-survival-for-cancer-stricken-hornbill-at-jurong-bird-park

சிங்கப்பூர் பூங்காவில் உள்ள ஹார்ன் பில் வகை பறவை ஒன்றுக்கு புற்றுநோய் பாதித்த திசுக்கள் அகற்றப்பட்ட பின் 3-டி தொழில்நுட்பத்திலான செயற்கை அலகு பொருத்தப்பட்ட செய்தி வியப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது 

சிங்கப்பூரில் ஜுராங் பறவைகள் பூங்கா உள்ளது. இங்கு ஜேரி எனப் பெயரிடப்பட்ட 22 வயது வண்ணப்பறவைக்கு (ஹார்ன் பில்) 8 செ.மீ நீளத்தில் புற்றுநோய் கட்டி இருப்பதை பூங்கா ஊழியர்கள் கண்டறிந்தனர்.  பறவையின் அலகு பகுதியில் பெரும்பாலான திசுக்கள் புற்றுநோயால் அழிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள் 

சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றினர். அதோடு ஜேரிக்காக ஒரு 3-டி அலகு உருவாக்கப்பட்டது.  பற்களை ஒட்ட வைக்கக்கூடிய பிசின் மூலம் அந்த அலகு இறுக்கமாக ஒட்ட வைக்கப்பட்டது. ஜேரியின் வாலிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் அதன் புதிய 3டி அலகுக்கு பூசப்பட்டது. 

செப்டம்பர் மாதம் மருத்துவமனையிலிருந்து விடுக்கப்பட்ட ஜேரி, பூங்காவில் சிறப்பான பாதுகாப்புடன் இருந்து வருகிறது.  ஒரு புதிய அலகு உருவாக்கும் வரை ஜேரிக்கு இந்த செயற்கை அலகு பொருத்தப்பட்டிருக்கும். பின் 3டி தொழில்நுட்பத்திலான தற்போதைய அலகு நீக்கப்படும். மருத்துவத்துறையில் பறவைக்கு இத்தகைய செயற்கை முறையிலான அலகு பொருத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை.  

ஹார்ன் பில் 'ஜேரி' என்ற பெயருக்கு 'கவசம் அணிந்த போர் வீரர்' என்று பொருள். பெயருக்கும் ஏற்றது போல் 'ஜேரி' இதனைக் கடந்து வரும் என்று பூங்கா நிர்வாகிகள் பெருமிதமாக கூறியுள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close