இந்தோனேசிய நிலநடுக்கம் - 5,000 பேர் மாயம் - பலி 2000 ஆனது

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 11:08 am
indonesia-quake-more-than-5-000-people-could-still-be-missing

நிலநடுக்கம், சுனாமி பேரலைத் தாக்குதல், தொடர் நிலஅதிர்வு, எரிமலை சீற்றம் என இந்தோனேசியாவை இயற்கை பேரிடர் புரட்டிப்போட்ட நிலையில், அங்கு 5000 அதிகமானோரின் நிலை என்னவானது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி தீவில் சமீபத்தில் 7.5 ரிக்டர் அளவில், கடுமையான நிலநடுக்கமும், அதையடுத்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி  2000  பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலு நகரத்தில் உள்ள பெட்டோபோ மற்றும் பாலாராவ் ஆகிய கிராமங்கள், முற்றிலுமாக அழிந்து விட்டதாகவும், அங்கு வசித்து வந்த 5,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும்,  அந்த நாட்டின் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தொலைந்து போனவர்களை தேடும் பணி, வரும் 11 ஆம் தேதி வரை நடக்கும் என்றும், அதன் பின், அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்கப்படுவர் என்றும்  அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடல்கள் புதைந்திருக்க வாய்ப்பு 

திடீரென தீவிரமான சுனாமி தாக்கியதையடுத்து ஆயிரக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன. பலு நகர், பலரோ மற்றும் பெடோபோ ஆகிய இடங்ககளில் காணாமல் போயுள்ளவர்களில் 1000 பேர் அங்கு சுனாமி காரணமாகக் குவிந்த மூன்று மீட்டர் ஆழமுள்ள சேற்றில் புதைந்து இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அவர்களில் 74 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன. இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை இதுவரை 2000த்தை எட்டியுள்ளது. 

ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்பட்டு வரும் இடத்தில் அமைந்துள்ளன. இதனால் இங்கு அவ்வப்போது நிலநடுக்கம் அல்லது நில அதிர்வுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது. இதில் இந்தோனேசியாவில் மட்டும் கிட்டத்தட்ட 120 எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது வெடிக்கும் வாய்ப்பு உடையனவாக இருந்து வருகின்றன. 

இங்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிதான் 21-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான சுனாமி என கருதப்படுகிறது. அதில் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close