ஆப்கானில் வேட்பாளர் படுகொலை: இருக்கையின் கிழே வெடிகுண்டு! 

  Padmapriya   | Last Modified : 17 Oct, 2018 09:21 pm
afghan-election-candidate-killed-in-taliban-attack

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மெண்டில் புதன்கிழமையன்று தேர்தல் வேட்பாளரை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  வரும் சனிக்கிழமை ஆப்கானில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஹெல்மெண்டு பகுதி வேட்பாளர் அப்துல் ஜாபர் அலுவலகத்தில் அவர் அமரும் இருக்கையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு அது வெடித்த நிலையில் அவர் கொல்லப்பட்டார். இதில் மேலும் பலரும் காயமடைந்தனர். 

இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். 

இதே போல, ஆப்கானில் கடந்த  வாரம் தேர்தல் பிரச்சார பேரணி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2 வாரங்களில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் ஜாபரையும் சேர்த்து இதுவரை 10 வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close