ஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை

  தர்மா   | Last Modified : 20 Oct, 2018 08:39 pm

no-admission-for-female-in-japan-sabarimala-too

ஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை

ஜப்பான் நாட்டில் மலைப்பகுதியில் நம் நாட்டில் உள்ள சபரிமலையைப்போல அமைந்துள்ள பௌத்த ஆலயத்திலும் கடந்த ஏழாம் நூற்றாண்டிலிருந்து பெண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு அதை எவ்வித முணுமுணுப்புகளும் இன்றி அந்த நாட்டு மக்கள் பாரம்பரித்தை அடிபிறளாமல் பின்பற்றி வருகின்றனர்.

ஜப்பான் நாட்டில் உள்ள ப்ரிபெக்காரி மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் யாசீனோ ஒமீனேன்-ஜீ  என்ற பௌத்த ஆலயம் அமைந்துள்ளது. இது பௌத்த மதத்தின் ஷகென்டோ பிரிவைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் பெண்களின் வாடையின்றி தனிமையில் தியான வாழ்க்கையோடு, பிரம்மச்சரிய  முறையையும் ஷகென்டோ பிரிவு பௌத்தர்கள் இந்த ஆலயத்தை சுற்றி வாழ்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். ப்ரிபெக்காரி மலையில்  1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒமீனேன் ஆலயம், யுனெஸ்கோ பட்டியலில் பாரம்ப புனித தலமாக இடம் பிடித்துள்ளது.

7 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், ஷகென்டோ பிரிவின் நிறுவனர் என்னோகியோஜா, செர்ரி மலரில் இருந்து  எடுக்கப்பட்ட ரசத்தைக் கொண்டு இங்கு வழிபட்டு வரும் சாயோ சிலையை ஒமீனேன் ஆலய கற்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்தார்.
ஹிந்து மதத்தைப் போலவே ஜப்பான் நாட்டில் மக்களால் பின்பற்றப்பட்டு வரும் பௌத்த மதத்திலும் ஆண், பெண் பேதம் கிடையாது. இருந்த போதிலும் இந்த ஆலயத்தின் சம்பிரதாயப்படி பெண் வாடையற்று பிரம்மச்சரிய வாழ்க்கையுடன் கூடிய தவவாழ்வே இங்கு பின்பற்றப்படும் பிரதான அம்சமாக உள்ளது. அதனடிப்படையில் இந்த ஆலயத்தில், ஹயன் காலம் தொடங்கி, இன்று வரை, பெண்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷுன்கென்டோவை பின்பற்றுபவர்களின் மின புனிதமான இடமான இங்கு மதகுருவின் வழிகாட்டுதல்படி ஆலய சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. பிரம்மச்சரிகளுக்கான தவசாலையாக இந்த ஆலயம் விளங்கி வந்த போதிலும். இங்கு ஆண்டின் குறிப்பிட் மாதங்களில் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. இந்த ஆலயத்தில் ஜப்பான் பாரம்பரிய முறையில் கட்டமைக்கப்பட்ட  பிரதான வாயிலின் கதவுகள் நம் ஐயப்பன் சன்னிதானம் குறிப்பிட்ட காலங்களில்  திறக்கப்படுவதுபோல பொதுமக்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்படும். அதன்படி ஆண்டுதோறும் மே 3 ஆம் தேதி திறக்கப்பட்டு, செப்டம்பர் 26ஆம் தேதி இந்த ஆலயம் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கப்படுகிறது.

வருடம் முழுவதும் மலையேறி இந்த ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்பவர்களும் உண்டு. இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள பிரதான மண்டபத்தில் ஏழாம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஷகென்டோ மதகுருக்களான ஜவா அவ்தார் மற்றும் என்னோகியோஜாவின் சித்திரங்களை இன்றளவும் பாதுகாக்கபட்ட நிலையில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மலையின் அடிவாரத்தில் இருந்து ஆலயத்தின் பிரதான வாயிலை பாதசாரியாக சென்றடைய நல்ல ஆரோக்கியமான இளைஞருக்கு குறைந்தது நான்கு மணி நேரம் தேவைப்படும்
7ஆம் நூற்றாண்டில் இருந்து இன்றளவும் பெண்கள் இந்த கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் யாசீனோ ஒமீனேன்-ஜீ  ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஓமின் என்ற பெயரில் அமைக்கப்ட்டுள்ள பாலத்தின் அருகேயுள்ள நொயோனின் கேக்காய் என்ற நுழைவாயில் வரை மட்டுமே இன்றளவும் பெண்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய பெருமை வாய்ந்த அந்த நுழைவாயில் வரை வந்து தரிசிப்பதையே யாசீனோ ஒமீனேன்-ஜீ ஆலயத்தில் அமைந்துள்ள சாயோ தெய்வத்தை மலைமேல் ஏறி் தரிசிப்பதற்கு இணையாகக் கருதி  நொயோன் நுழைவாயிலை வணங்கி விட்டு பெண்கள் அங்கிருந்து கிழே இறங்கி விடுகின்றனர். இந்தியாவை விட மிகவும் வளர்ந்த நாடான ஜப்பானில் இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர்கள் அல்லது போராளிகள் மத்தியில் இதுவரை எவ்வித முணுமுணுப்புகளும் எழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.