இலங்கை பிரதமரானார் ராஜபக்சே!

  Newstm Desk   | Last Modified : 26 Oct, 2018 10:40 pm
rajapakse-becomes-sri-lankan-prime-minister

இலங்கை ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அதிபர் சிறிசேனா முன்னிலையில் இன்று மாலை ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார்.

ஆளும் கூட்டணியில் இருந்து அதிபர் சிறிசேனாவின் கட்சி விலகியதை தொடர்ந்து கூட்டணி கலைந்தது. அதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்துள்ளார் சிறிசேனா. 

அதிபரின் இந்த முடிவு, அரசியல் சாசனத்திற்குக்கு எதிரானது, என நிதித்துறை அமைச்சர் மங்களா சமரவீர தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளதாகவும், ராஜபக்சே அல்ல, தானே இலங்கையின் பிரதமர் என்றும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close