ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி! ஆசிய பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை 

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2018 12:57 pm

pm-meets-japan-s-shinzo-abe-regional-security-on-agenda-in-talks

இந்திய - ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார். டோக்கியோ சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  டோக்கியோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் 2 நாள்  மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டின்போது இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் பல்வேறு அம்சங்கள், முதலீடுகள், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் பிரதமர் இந்தியா வந்தபோது, அவருக்கு குஜராத்தில் பிரதமர் மோடி பிரத்யேக விருந்து அளித்து சிறப்பித்திருத்தார்.  அதே போல, பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ யமனாஷி மாகாணத்தில் உள்ள தனது விடுமுறை கால ஓய்வு இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கி கவுரவிக்கிறார்.

முன்னதாக ஜப்பான் புறப்படும்போது பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்''இந்தியாவும், ஜப்பானும் வெற்றிக்கூட்டணி ஆகும். பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப நவீன மயத்தில் ஜப்பான், இந்தியாவின் நம்பத்தகுந்த கூட்டாளி ஆகும். இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்கிற நாடாக ஜப்பான் திகழ்கிறது. ஜப்பானுடனான நமது உறவு, பொருளாதார ரீதியிலும், கொள்கை ரீதியிலும் சமீப காலத்தில் முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது. இன்றைய தினம் இது மிகப்பெரிய பொருள் மற்றும் நோக்கத்துக்கான கூட்டாளித்துவம் ஆகும்.

நான் பிரதமரான பிறகு முதன் முதலாக 2014-ம் ஆண்டு செப்டம்பரில் ஜப்பான் சென்றேன். அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் நடத்தப்போகிற இந்த சந்திப்பு, 12-வது சந்திப்பு ஆகும். இரு நாடுகளும் ஜனநாயக நாடுகள். அனைவருக்கும் சமாதானத்தையும், வளத்தையும் நாடுகிறோம்.

மும்பை- ஆமதாபாத் அதிவேக ரெயில் திட்டம், அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு சாலை திட்டம், நமது பொருளாதார செயல்பாடுகளின் உச்சகட்ட அளவையும், வலுவையும் பிரதிபலிக்கின்றன. நமது டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தொடங்குவோம், எழுந்து நில் இந்தியா திட்டங்களின் முயற்சிகளில் ஜப்பான் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் மீது ஜப்பானிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார் 

இரு நாட்டு தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடுவேன். அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பேசுவேன். இது நமது வர்த்தகம், முதலீடு உறவுகளை வலுப்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.