188 பேருடன் கடலில் நொறுங்கிய இந்தோனேசிய விமானத்தை ஓட்டிய இந்தியர்

  Padmapriya   | Last Modified : 29 Oct, 2018 03:40 pm
pilot-from-delhi-31-was-flying-indonesian-plane-that-crashed-into-sea

இந்தோனேசியாவில் 188 பேருடன் பறந்த பயணிகள் விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு பின் நொறுங்கியதாக அறிவிக்கப்பட்ட விமானத்தை பவ்யே சுனேஜா என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது. 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து இன்று காலை பங்க்காஇந்தோனேசியாவில் 188 பேருடன் பறந்த பயணிகள் விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு பின் நொறுங்கியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் விமானத்தை பவ்யே சுனேஜா என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது.ல் பினாங் தீவுகள் சென்ற விமானம் 13 நிமிடத்தில் மாயமான நிலையில், அது கடலில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்தனர். 

'லயன் ஏர் பேசஞ்சர்ஸ்' எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 188 பேர் சென்றனர்.

புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.
மாயமான விமானம், ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை தேடி வருகிறோம் என்று இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

பின்னர் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன.  ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்களும் மிதந்தபடி இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.

இந்த விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்புகள் குறைவு என்று அஞ்சப்படும் நிலையில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா (31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது. துணை விமானியாக அமர்ந்திருந்த ஹர்வினோ என்பவரும் 5 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் கொண்டவர் என்றும் பவ்யே சுனேஜா 6 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் மிக்கவர் என்றும் இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பவ்யே சுனேஜா டெல்லியை சேர்த்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in  

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close