எனக்கு கம்ப்யூட்டரே பயன்படுத்த தெரியாது: ஜப்பான் சைபர் பாதுக்காப்பு அமைச்சர் பேச்சு 

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 05:46 pm
japan-s-cybersecurity-minister-admits-he-has-never-used-a-computer

யுஎஸ்பி டிரைவ் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்விக்கு எழுப்பியதற்கு பதில் அளித்த ஜப்பான் சைபர் பாதுக்காப்பு துணை அமைச்சர், தனக்கு கம்ப்யூட்டரே பயன்படுத்த தெரியாது என்றது அந்நாட்டில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பானின் சைபர் பாதுகாப்பு துணை தலைவராக யோஷிடாகா சகுரதா (68) கடந்த மாதம் பதவிஏற்றார். இவர் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு துறை அமைச்சராகவும் இருக்கிறார்.  சமீபத்தில் நடந்த தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபேயின் கட்சி மீண்டும் தேர்வானதை அடுத்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது தான் யோஷிடாகா சைபர் பாதுகாப்பு துறை பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் ஜப்பான் அணுசக்தி நிலையங்களில் யுஎஸ்பி டிரைவ்கள் பயன்படுத்தப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதாக ஜப்பான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது பதிலளித்த யோஷிடாகா, ''நான் எனது 25 வது வயது முதல் எனது துறை ஊழியர்களுக்கும், செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்கி வருகிறேன். நானாக கம்ப்யூட்டர்களை பயன்படுத்தியதில்லை'' என தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதுவும் சைபர் பாதுக்காப்பு துணை அமைச்சராக உள்ள யோஷிடாகாவின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், கம்யூட்டர்களையே தொடாத ஒருவர் சைபர் பாதுகாப்பு கொள்கைகளுக்கு பொறுப்பாளராக இருப்பது நம்ப முடியாததாக உள்ளது என விமர்ச்த்துள்ளனர். 

இவ்வாறு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க அவருக்கு வெட்கமாக இல்லையா என பலரும் யோஷிடாகாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close