செல்போனே கதியாக இருந்த பாகன்! கடுப்பான குட்டியானை!! 

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 07:46 pm
cheeky-baby-elephant-tries-to-steal-her-human-friend-s-phone-from-his-hand

இந்தோனேசியா விலங்கியல் பூங்காவில், தன்னைக் கவனிக்காமல் செல்போனை பயன்படுத்திய பாகனின் செல்போனை குட்டியானை ஒன்று விடாமல் பிடுங்கும் காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன. 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் பரூமன் நகாரி என்ற விலங்கியல் பூங்கா உள்ளது. இங்கு உள்ள உலி என்ற யானைக் குட்டி தனது தாயை இழந்துவிட்டது. இதனால் முழுவதும் பாகனின் பராமரிப்பிலேயே குட்டி யானை விடப்பட்டது. 

இந்த நிலையில்,  தன்னைக் கவனிக்காமல் செல்போனை பார்த்துக்கொண்டிருந்த பாகனைப் கண்ட, குட்டி யானை உலி, தன்னைக் கவனிக்குமாறு செய்கை செய்தது. ஆனால் அதனை பாகன் கண்டு கொள்ளாததால் செல்லாமாகக் கோபம் கொண்ட உலி யானைக்குட்டி, பாகனிடமிருந்து செல்போனை பறிக்க முயன்றது. அவர் தடுத்தும் அது விடாமல் செல்போனை பிடுங்கும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. கடைசி வரை செல்போனை விடாத அந்த பாகனை குட்டியானை செல்லக் கோபத்துடன் கடித்தும் விடுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close