வடகொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா - தென் கொரியா பேச்சுவார்த்தை!

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 05:03 am
us-envoy-for-korean-denuclearisation-to-meet-with-south-korea

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத தடுப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட சிறப்பு அமெரிக்க பிரதிநிதி, இன்று தென் கொரிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அணு ஆயுத ஒழிப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் இதில் ஆலோசனை செய்யப்படுகின்றது.

சர்வதேச அளவில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்து வந்த நிலையில், தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அந்நாடு முன் வந்தது. பின்னர், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், படிப்படியாக, வடகொரியாவின் அணு ஆயுதங்களை கைவிட நடவடிக்கை எடுக்கப்படும் என கிம் உறுதியளித்தார். 

இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிக்கும் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஸ்டீபன் பெய்கன், தென் கொரிய அதிகாரிகளை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். வடகொரியாவின் அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை, இரு நாடுகளின் பாதுகாப்பு குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா ஒப்புகொண்ட நிலையில், அதற்கான எந்த பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பில் அது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close