அமெரிக்க தாக்குதலில் முக்கிய தலிபான் தலைவன் பலி!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 04:28 am
top-taliban-leader-killed-in-us-airstrikes

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில், தலிபான் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கடுத்தப்படும் அப்துல் மனன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மந்த் பிராந்தியத்தின் 'நிழல் ஆளுநராக' குறிப்பிடப்படுபவர் அப்துல் மனன். தலிபான் பிடியில் உள்ள இந்த பகுதியை நிர்வகித்து வரும் மனன், தலிபான் அமைப்பின் நிதி விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலுக்கு பேர் போன ஹெல்மந்த் பகுதியில் இருந்து தலிபான் அமைப்புக்கு கணிசமான அளவு நிதி கிடைத்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க விமானப்படை, ஹெல்மந்த் பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் மனன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களே இதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2016ம் ஆண்டில், தலிபான் அமைப்பின் தலைவர் அக்தர் மன்சூர்,  அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மனனின் மரணம் அந்த அமைப்புக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close