ஆப்கான் தீவிரவாத தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

  Newstm Desk   | Last Modified : 25 Dec, 2018 07:57 pm
afghan-terror-attack-death-toll-rises-to-48

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள அரசு கட்டிடத்தில் இன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 29 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 5 பேர் தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அந்நாட்டின் அரசு கட்டிடம் ஒன்றில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கட்டிடத்தின் வாசலில் காரில் வந்த தீவிரவாதி, தற்கொலைகுண்டு தாக்குதல் நடத்தினான். இதை தொடர்ந்து 4 தீவிரவாதிகள் அங்கிருந்த ஊனமுற்றோர் நலத்துறை மற்றும் ராணுவ வீரர்கள் நலத்துறை ஆகிய அலுவலகங்களுக்குள் புகுந்து, அங்கிருந்த பொதுமக்களை பிணய கைதிகளாக பிடித்து வைத்தனர். இந்த தாக்குதலில் 48 பேர் பலியாகினர். பாதுகாப்பு படையினர் கட்டிடத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொது மக்களை காப்பாற்ற முயற்சி செய்தனர். இரவு நேரம் ஆனதால், ராணுவ வீரர்களால் சுமார் 7 மணி நேரம் துப்பாகிச் சண்டை நடந்தது.

கட்டிடத்திற்குள் புகுந்த 4 தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டனர். தற்போது அந்த கட்டிடத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. காயமடைந்த 29 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டிடத்திலிருந்து 357 அப்பாவி பொதுமக்களை ராணுவம் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close