உஸ்மான் புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 68 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 06:45 pm
68-dead-due-to-cyclone-usman-in-philippines

உஸ்மான் புயலால், கடந்த சில தினங்களில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், பலியனோர் எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா மற்றும் விசையாஸ் தீவுகளை கடந்த சில தினங்களாக உஸ்மான் என்ற புயல் கடுமையாக தாக்கியது. புயலால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பலியானோர் எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் மணிலாவின் பைகோல் பகுதியில் 57 பேர் இறந்ததாகவும், விசயாஸ் தீவின் கிழக்கு பகுதியில் 11 பேர் இறந்ததாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இரண்டு பகுதிகளிலும் 19 பேர் காணாமல் போனதாகவும், அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புயலால், இரண்டு பகுதிகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டு, சுமார் 40,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close