இந்தியாவுடன் மீண்டும் நெருக்கமான உறவு: வங்கதேச பிரதமர் ஹசீனா உறுதி

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 09:53 pm
bangladesh-pm-hasina-promises-to-reinforce-ties-with-india

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ஷேக் ஹசீனா, இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தவும், வடகிழக்கு மாநிலங்களுடனான உறவை மேம்படுத்தவும் உறுதி அளித்துள்ளார்.

நேற்று வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் டெப், பிரதமர் ஹசீனாவை தொலைபேசியில் அழைத்து, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது ஹசீனா, திரிபுரா, இந்திய வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இந்திய அரசுடன் நெருக்கமான உறவை கடைபிடிக்க உள்ளதாக உறுதியளித்ததாக டெப் தெரிவித்துள்ளார். 

"திரிபுரா தொடர்பான பிரச்னைகளுக்கும், புதிய திட்டங்களுக்கும், இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும், தனது அரசு முன்னுரிமை கொடுக்கும்" என ஹசீனா தெரிவித்தார். மேலும் பிரதமர் ஹசீனாவை திரிபுராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 2012ம் ஆண்டு பிரதமர் ஹசினா திரிபுரா தலைநகர் ஆகர்டலாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close